ஷங்கர் மகள் திருமண நிகழ்ச்சியில் மகன், மகளுடன் கலந்து கொண்ட நடிகை ஷாலினி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷங்கர் மகள் திருமண நிகழ்ச்சியில் மகன், மகளுடன் கலந்து கொண்ட நடிகை ஷாலினி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Published

on

பிரபல இயக்குனரான ஷங்கரின் மூத்த மகளுக்கு கடந்த 15-ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தரும் கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் உறவினர்கள், நண்பர்கள், திரை பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

Advertisement

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் கமலஹாசன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நடிகர் விக்ரம், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, இயக்குனர் மணிரத்தினம், அவரது மனைவி சுகாசினி என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் ஐஸ்வர்யா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement