LATEST NEWS
இதென்னடா ஆச்சரியமா இருக்கு.. அச்சு, அசலாக சமந்தா போலவே இருக்கும் பெண்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரமாக பேசி முடிவெடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமந்தா மையோசிட்டிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து தனது உடல் நிலையை கவனித்து வந்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது ஆங்கிலத்தில் உருவான சிட்டாட்டல் என்னும் வெப் சீரியஸில் இந்திய பதிப்பில் சமந்தா நடித்து வருகிறார் அவருக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார். விவாகரத்திற்கு பிறகு சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்தது. இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
இந்நிலையில் நடிகை சமந்தா போலவே இருக்கும் ஒரு பெண் சமந்தா அவரது திருமணத்தில் எப்படி இருந்தாரோ அது போலவே புடவை, மேக்கப், அணிகலன்களை அணிந்து சோசியல் மீடியாவில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக இந்த பெண் சமந்தா போலவே உள்ளாரே என ஆச்சரியத்தில் உள்ளனர்.