LATEST NEWS
தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி.. அச்சு அசலாக ஜோதிகா போலவே இருக்கும் மகள்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!!
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐ.எஸ்.பி.எல்) என அழைக்கப்படும் டி 10 தொடர் போட்டிகள் நேற்று மும்பையில் தொடங்கியது. இதில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஸ்ரீநகர் என ஆறு அணிகள் விளையாட உள்ளது.வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறும் தொடரில் மொத்தம் 18 போட்டிகள் போட்டிகள் நடத்தப்படும்.
ஐ.எஸ்.பி.எல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்குவார்கள். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூர் அணியை ஹிருத்திக் ரோஷனும் வாங்கியுள்ளனர். இதனை அடுத்து ஸ்ரீநகர் அணியை அக்ஷய்குமாரும் ஹைதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம் சரணும் வாங்கினர் . முதல் போட்டியில் அமிதாப்பச்சன் அணியும் அக்ஷய் குமார் அணியும் மோதியது.
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் நடிகர்கள் ராம்சரண், சூர்யா, அக்ஷய்குமார், சச்சின் ஆகியோர் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் சென்னை சிங்கம்ஸ் அணியை வாங்கிய நடிகர் சூர்யா தொடக்க நிகழ்ச்சிக்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்தார்.
இதனையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் சூர்யா, அவரது மகள் தியா, மகன் தேவ் ஆகியோர் புகைப்படம் எடுத்து கொண்டனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் தியா அப்படியே ஜோதிகா மாதிரியே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். கங்குவா, சூரரை போற்று ஹிந்தி ரீமேக், வாடிவாசல் என அடுத்தடுத்த படங்களில் ஈசியாக இருக்கும் சூர்யா தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார்.