LATEST NEWS
நடிகை அசின் கையில் இருக்கும் சிறுவன் அந்த பிரபல சீரியல் நடிகரா..? என்னப்பா சொல்றீங்க.. வைரலாகும் புகைப்படம்..!!

பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகும். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு தன்னை ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் நடிகர் சாணக்யா நடிக்கிறார். டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலையில் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே நடிகர் சாணக்யா படங்கள், விளம்பரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.
நடிகை கீதா ஸ்ரீயின் மகன் தான் சாணக்யா. இவர் மெட்டி ஒலி சீரியலில் கோபி விஜயலட்சுமி மகனாக நடித்துள்ளார். சூர்யா அசின் நடிப்பில் வெளியான கஜினி திரைப்படத்தில் இடம்பெற்ற விளம்பரத்தில் சாணக்யா அசினின் மகனாக நடித்திருப்பார்.
பின்னர் அவள் பெயர் தமிழரசி படத்தில் ஜெயின் சிறுவயது கதாபாத்திரத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி படத்திலும் சாணக்யா நடித்துள்ளார். தற்போது சாணக்யா அசினுடன் சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.