LATEST NEWS
காதலியை கரம்பிடித்த சீரியல் நடிகர்… அவரும் ஒரு பிரபலமா..? வைரலாகும் மேரேஜ் போட்டோஸ்..!!
நடிகர் பிரேம் ஜேக்கப் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் மலையாள சின்னத்திரை நடிகை ஸ்வாசிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ஸ்வாசிகா தமிழில் வைகை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சாட்டை, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இது தவிர 25-க்கும் அதிகமான மலையாள திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்துள்ளார். இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளைச் சேர்ந்த சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
திருமணத்தில் நடிகர் சுரேஷ் கோபி, திலீப், ஸ்வேதா, அனுஸ்ரீ உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்வாசிகா பிரேம் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
