LATEST NEWS
ஆத்தாடி..! “30 செகண்ட்ஸ்.. 195 முத்தங்கள்” உலக சாதனை படைத்த பிரேசில் தம்பதி.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அசுர வேக காதல் வீடியோ..!!
பிரேசிலைச் சேர்ந்த ஒரு ஜோடி வெறும் 30 நொடிகளில் 195 முறை முத்தமிட்டு, ‘ஒரு இணையாக மிகக் குறைந்த நேரத்தில் அதிக முத்தங்கள்’ கொடுத்ததற்கான புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. பிரேசிலின் சாவ் ஜோஸ் தோஸ் காம்போஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதான மருத்துவர் ரெனாடோ பெய்மா கையா மற்றும் அவரது காதலியான 33 வயது மருத்துவர் நையாரா ராபர்ட்டா ரிபெய்ரோ டி மாரின்ஸ் ஆகியோரே இந்த விசித்திரமான மற்றும் சுவாரசியமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். தாங்கள் இருவரும் “உலகின் மிகச்சிறந்த தம்பதி” என்பதை நிரூபிக்கும் நோக்கத்துடனேயே இந்த சவாலை எதிர்கொண்டதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
https://www.instagram.com/reel/DaklWYWCV-G/?utm_source=ig_web_button_share_sheet
கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக இணைந்து பணியாற்றிய இந்த மருத்துவத் தம்பதி, இந்த அசாத்திய வேக முத்தச் சவாலை கின்னஸ் நடுவர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு தனிநபர் கின்னஸ் சாதனைகளைத் தன் வசம் வைத்துள்ள ரெனாடோ, தற்போது தன் காதலியின் பெயரையும் கின்னஸ் புத்தகத்தில் இணைத்ததில் பெருமிதம் கொள்கிறார். இந்தத் தம்பதியினர் அடுத்தகட்டமாக, ஜப்பானிய தம்பதியினர் வைத்துள்ள “1 நிமிடத்தில் அதிக முத்தங்கள் (277 முத்தங்கள்)” என்ற உலக சாதனையை முறியடிக்கத் திட்டமிட்டு தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
