பிரம்மாண்டமாக நடந்த நடிகை வரலட்சுமியின் நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்டமாக நடந்த நடிகை வரலட்சுமியின் நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

Published

on

பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் வரலட்சுமி கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் சண்டை கோழி 2, சர்க்கார், விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, இரவின் நிழல் போன்ற படத்தில் வரலட்சுமி கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிகேலாய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இருவரும் 14 ஆண்டுகள் நண்பர்களாக பழகிய நிலையில் தற்போது பெற்றோர் சம்பந்தத்துடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் நெருங்கி உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண தேதியை விரைவில் அறிவிப்பார்கள் என ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே வரலட்சுமியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in