“பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகனே”.. நடிகை சோனியாவின் மகனை பார்த்திருக்கிறீர்களா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!! - cinefeeds
Connect with us

GALLERY

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகனே”.. நடிகை சோனியாவின் மகனை பார்த்திருக்கிறீர்களா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Published

on

நடிகை சோனியா தனது மூன்றாவது வயதில் இவள் ஒரு நாடோடி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக சோனியா பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

பேபி சோனியா என அன்புடன் அழைக்கப்படும் அவர் குழந்தை பருவத்திலேயே பல குழந்தைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

Advertisement

முக்கியமாக பேபி ஷாலினிக்கு சோனியா குரல் கொடுத்துள்ளார்.

கடந்த 1987-ஆம் ஆண்டு நம்பராதி பூ என்ற திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரளா மாநில திரைப்பட விருதை வென்றவர் சோனியா.

Advertisement

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு சீரியல்களிலும் சோனியா நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக மட்டுமில்லாமல் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

கடந்த 2003-ஆம் ஆண்டு வில்லன் நடிகர் ஆன போஸ் வெங்கட்டை சோனியா திருமணம் செய்து கொண்டார்.

போஸ் வெங்கட் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் நடித்து பிரபலமானார்.

Advertisement

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் போஸ் நடித்துள்ளார். மேலும் அவர் கன்னி மாடம் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த தம்பதியினருக்கு தேஜாஸ்வின் என்ற மகனும், பவதாரணி என்ற மகளும் இருக்கின்றனர். தற்போது தேஜாஸ்வின் தனது இருபதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Advertisement

அதனை முன்னிட்டு சோனியா தனது மகனுடன் அடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் தேஜாஸ்வினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement