இந்த ஒரே ஒரு செயலி போதும்.. நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ.. திடீர் சிக்கலால் புலம்பும் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த ஒரே ஒரு செயலி போதும்.. நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ.. திடீர் சிக்கலால் புலம்பும் ரசிகர்கள்..!!

Published

on

முன்னணி நடிகரான விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தனது 69-ஆவது படம் முடிந்த பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என விஜய் கூறியிருந்தார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியையும் ஆரம்பித்தார். வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் களமிறங்க உள்ளது.

தற்போது கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக நடிகர் விஜய் புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசிய நடிகர் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி வரவேற்கும் சட்டசபை தேர்தலை நோக்கி பயணிக்கிறோம்.

Advertisement

கட்சியில் பொதுமக்கள் உறுப்பினராக சேர்வதற்கான இணையதள லிங்கை வெளியிட்டார். மேலும் கட்சியில் தான் உறுப்பினராக சேர்ந்ததை காண்பித்து நீங்கள் விரும்பினால் கட்சியில் சேருங்கள் என கோரிக்கை விடுத்தார். தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை கியூஆர் கோடு இணைப்புகளை பயன்படுத்தி மிகவும் எளிய முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாக பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால்  சிக்கல் என்னவென்றால் வாட்ஸ் அப், டெலிகிராம் என அனைத்து தளங்களிலும் விஜய் கட்சியின் இணையதள செயலி முடங்கி விட்டது. உறுப்பினராக இணைய முயற்சி செய்வதற்கு ஒரு முறை பயன்படுத்தும் OTP செல்வதில் பிரச்சனை ஏற்பட்டதால் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அதனை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Jagadish Palanisamy (@jagadish_palanisamy)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement