புர்ஜ் கலிபாவில் ஷூட்டிங்கா..? LIC படத்தின் கதை அந்த மாதிரி இருக்குமா..? கச்சிதமாக ஸ்கெட்ச் பொடும் விக்னேஷ் சிவன்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

புர்ஜ் கலிபாவில் ஷூட்டிங்கா..? LIC படத்தின் கதை அந்த மாதிரி இருக்குமா..? கச்சிதமாக ஸ்கெட்ச் பொடும் விக்னேஷ் சிவன்..!!

Published

on

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2012-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து விக்னேஷ் சிவன், LIC என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயினாக நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisement

LIC படத்தின் ஷூட்டிங் கோவையில் இருக்கும் ஈஷா அறக்கட்டளையில் நடைபெற்றது. ஏழு நாட்கள் அங்கு ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் இருக்கும் உயரமான கட்டிடங்களில் ஷூட்டிங்கை நடத்துகிறார்களாம்.

LIC படம் 2050-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெறும் கதைக்களத்தை மையமாகக் கொண்டதாம். இதனால் துபாய் பூர்ஜி கலிபா போன்ற உயரமான கட்டிடங்களில் அமைவது போல காட்சி எடுக்கப்படுகிறது. இதனையடுத்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Continue Reading
Advertisement