LATEST NEWS
“தலைவர் 171″…. டீசரை பார்த்த சர்ச்சை பட இயக்குனர்…. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?…!!!
நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகப் போகும் தலைவர் 171 திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்த படம் தொடர்பாக அவ்வப்போது புது புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றது. நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே எல்ஜி ஞானவேல் இயக்கும் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை முடித்த பின்னரே லோகேஷ் கனகராஜ் உடன் புது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். படம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு படத்தின் மீது நிலவி வருகின்றது. கமல், விஜய்யை தொடர்ந்து ரஜினியை வைத்து நோட்டீஸ் கனகராஜ் படம் இயக்க இருப்பதால் கட்டாயம் வெற்றி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.
ரஜினி மிரட்டலான ஸ்டைலில், கைக்கடிகாரம் வைத்து ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தார். இந்த போஸ்டர் அமோக வரவேற்பு பெற்றிருந்தது. மேலும் வரும் 22ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறி வந்தன. இந்நிலையில் தலைவர் 171 டைட்டில் டீசர் குறித்து அனிமல் படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் தலைவர் 171 டைட்டில் டீசரை தான் பார்த்ததாகவும், அதில் மிரட்டலாக ரஜினிகாந்து இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த தகவல் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்துள்ளது.