LATEST NEWS
“அவர ஒரு வாரம் வீட்டில் வைத்து பூட்டிடுங்க”…. சேத்தன் குடும்பத்தாருக்கு அட்வைஸ் பண்ண சூரி… சம்பவம் பெருசு போலயே…!!!

விடுதலை 2 ரிலீஸ் ஆகும்போது நடிகர் சேத்தனை ஒரு வாரம் அவர்களின் வீட்டுக்குள் பூட்டி வைக்குமாறு சூரி கோரிக்கை வைத்திருக்கின்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் சேத்தன் நடித்திருந்தார்.

#image_title
அதில் மிகவும் மோசமான போலீஸ் அதிகாரியாக அவர் நடித்திருப்பார். இவரின் நடிப்பை பார்த்த பலரும் இவர் நல்லாவே இருக்க மாட்டார் என்று சாபம் கொடுத்து வந்தார்கள். ஆனால் வெற்றிமாறன் சொன்னதை மட்டும் தான் அவர் நடிக்க செய்தார் என்பதை மறந்து மக்கள் அவரைத் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

#image_title
இந்நிலையில் விடுதலை படத்தின் 2-வது பாகம் வரவுள்ளது. ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் படம் தள்ளிப்போனது. இந்நிலையில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய சூரி விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும். இப்படத்தில் சேத்தனின் அட்ராசிட்டி இன்னும் அதிகமாக இருக்கும். படம் ரிலீஸ் ஆகும்போது ஒரு வாரத்திற்கு அவரை வீட்டில் வைத்து பூட்டி விடுங்கள் என்று அவரது குடும்பத்தாரை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.