LATEST NEWS
விவேக் அப்படி செய்வாருன்னு நினைக்கல.. கண்கலங்கி நின்ற காமெடி நடிகர் குமரிமுத்து.. என்னவா இருக்கும்..?

பிரபல நகைச்சுவை நடிகரான குமரி முத்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஒருமுறை குமரிமுத்துக்கு விவேக் உதவி செய்துள்ளார். குமரிமுத்துவின் தனது கடைசி பெண்ணின் கல்யாணத்தின்போது போதுமான அளவு பணம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார்.
அப்போது இலங்கையில் ஒரு கலை நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்துள்ளது. அதற்கு குமரிமுத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சி ஏற்பாடு அவர்கள் விவேக்கையும் அழைத்து வர முடியுமா என கேட்டுள்ளனர். அதன்படி குமரிமுத்து விவேக்கிடம் சென்று நிலைமையை எடுத்துக் கூறி பேசியுள்ளார்.
அப்போது விவேக் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 2 லட்ச ரூபாய் சம்பளம் பேசி முடிக்கப்பட்டது. அவர்கள் நினைத்தபடி நிகழ்ச்சியும் நல்லபடியாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் விவேக்கிடம் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர்.
அந்த பணத்தை விவேக் குமரி முத்துவிடம் கொடுத்து உங்க பொண்ணு கல்யாணத்தை நடத்த முடியாமல் பணக்கஷ்டத்தில் இருப்பதாக சொன்னீர்களே. இதையும் நீங்களே வச்சுக்கோங்க. கல்யாணத்தை நல்லபடியா நடத்துங்க. உங்களுக்காக தான் கேட்டதுமே இந்த நிகழ்ச்சிக்கு வர ஒத்துக்கிட்டேன் என கூறியுள்ளார். அப்போது சந்தோஷம் தாங்க முடியாமல் குமரிமுத்து அழுதுள்ளார். சின்ன கலைவாணர் விவேக் ரசிகர்களால் மறக்கவே முடியாது.