LATEST NEWS
வாக்கு சாவடிக்கு முதல் ஆளாக வந்த அஜித்.. தல தல என கூச்சலிட்ட ரசிகர்கள்.. வைரலாகும் போட்டோஸ்..!!
முன்னணி நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கம் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவான்மியூரில் இருக்கும் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து மை வைத்த கை விரலை காட்டி ரசிகர்களை ஓட்டு போட வாங்க என அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக அஜித் வாக்குச்சாவடிக்கு வந்த போது அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
இது குறித்த வீடியோவும், போட்டோசும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.