அம்மாவே எனக்கு பொண்ணா வந்து பிறந்து இருக்காங்க… அவங்க ரெண்டு பேரும் என் 2 கண்கள்… ஸ்ரீதேவி உருக்கம்…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாவே எனக்கு பொண்ணா வந்து பிறந்து இருக்காங்க… அவங்க ரெண்டு பேரும் என் 2 கண்கள்… ஸ்ரீதேவி உருக்கம்…!!!

Published

on

விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியின் கடைசி மகளான ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக ரிக்ஷ மாமா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ஹீரோயினியாக கதிர் இயக்கத்தில் வெளிவந்த காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் அந்தளவு கை கொடுக்கவில்லை.

#image_title

அதை தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக தித்திக்குதே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பிரியமான தோழி, தேவதையை கண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இந்நிலையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு ஸ்ரீதேவி பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

#image_title

அதில் நான் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. என் மகள் கோபிகா பேசுவது, நடந்து கொள்வது அனைத்துமே என் அம்மா மாதிரி இருக்கும். என் அம்மா தான் எனக்கு மகளாக பிறந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். என் அம்மாவை நான் மிஸ் பண்ணாத நாளே கிடையாது. நான் மிஸ் பண்ண கூடாது என்பதற்காக பிரீத்தா அக்காவும், அப்பாவும் என்னை மிகவும் செல்லமாக வளர்த்தார்கள் என்று அவர் பேசியிருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement