LATEST NEWS
“பணம் வாங்குனா, அவங்களுக்கு தான் ஓட்டு போடணும்னு இல்ல”…. நல்லவங்களுக்கு போடுங்க…. விஜய் ஆண்டனி ஓபன் டாக்…!!!
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி. அதை தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பல வரவேற்பு கொடுத்த நிலையை தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது விநாயகர் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படம் ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருக்கின்றது. தொடர்ந்து இப்படத்தின் பிரமோஷனுக்காக பல இடங்களுக்கு சென்று வருகிறார். விஜய் ஆண்டனி கோவையில் அளித்த பேட்டியில் படம் தவிர்த்து அரசியல் பற்றியும் பேசி இருந்தார். அவர் அதில் கூறியதாவது, குடும்பமாக சென்று பார்க்கும் திரைப்படமாக இப்படம் அமைந்திருக்கின்றது.
கணவன் மனைவிக்கிடையான காதல் எப்படி இருக்க வேண்டும் என்று இதில் கூறப்பட்டிருக்கின்றது. ஆண் தோல்வி அடையும்போது அவரை தேற்ற ஒரு தாய் மனைவி போன்றவர்கள் எப்படி முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று இந்த திரைப்படத்தில் கூறியிருக்கிறோம். அரசியல் கட்சியினர் ஒட்டிற்காக பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் பணம் வாங்கிய கட்சிக்குதான் ஓட்டு போட வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று அவர் பேசியிருந்தார். இவர் பேசியிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.