LATEST NEWS
நிகழ்ச்சிக்கு செருப்பு போடாமல் வந்த விஜய் ஆண்டனி.. அதுக்கு இப்படி ஒரு காரணமா..? அவரே சொன்ன பதில்..!!
பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஹிட்லர் என்ற படத்தில் நடித்துள்ளார். முன்னதாக விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஹிட்லர் படம் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படைவீரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா ஹிட்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் ஹிட்லர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் ஆண்டனி செருப்பு போடாமல் வந்துள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் ஆண்டனி, மனசுக்கு தோணுச்சு அதனான் நிறுத்திட்டேன். திடீர்னு தோணும். திடீர்னு எதையாவது ஆரம்பிக்கணும்னு நினைச்சா ஆரம்பிச்சிடுவேன் என பதில் கூறியுள்ளார்.