LATEST NEWS
அது அவங்க இஷ்டம்…! பார்க்க புடிக்கலைன்னா கண்ணை மூடிக்கோங்க…. பெண்களின் உடை குறித்த கேள்வி… விஜய் ஆண்டனி நச் பதில்…!!!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதைத் தொடர்ந்து தற்போது ஹீரோவாகச் வரும் விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படம் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு பட குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

#image_title
தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த இவர் பிச்சைக்காரன் திரைப்படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கின்றார்.
யூட்யூபில் காதல் டிஸ்டன்ஸ் என்ற தொடரை இயக்கிய விநாயகர் வைத்தியநாதன் படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படம் தொடர்பாக பிரமோஷன் வேலைகளில் விஜய் ஆண்டனி ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய விஜய் ஆண்டனி இந்த படத்தின் கதை இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்களை பாராட்டி பேசியிருந்தார்.

#image_title
மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அதில் ஹாப்பி ஸ்ட்ரீட் குறித்து நடிகர் ரஞ்சித்தின் கருத்து குறித்து விஜய் ஆண்டனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுக்கு பதில் அளித்தவர் பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவர்கள் தீர்மானிக்க வேண்டியது. உங்களுக்கு பார்க்க பிடிக்கவில்லை என்றால் நீங்கள் கண்களை மூடி கொள்ளுங்கள் என்று பேசியிருந்தார்.