LATEST NEWS
ரொம்ப பெருமையா இருக்கு…. மேடையில் மகளைப் பற்றி நெகிழ்ந்து பேசிய வனிதா விஜயகுமார்…!!!

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் டீன்ஸ். இந்த திரைப்படத்தில் தனது மகள் ஜோவிகா நடித்தது குறித்து வனிதா விஜயகுமார் பெருமையாக பேசி இருக்கிறார். குழந்தைகளை மையமாக வைத்து த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டது. டீன்ஸ் திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்குகளில் வெளியானது.\

#image_title
இது மீண்டும் ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வனிதா விஜயகுமார் இப்படத்தில் எனது மகள் நடித்திருக்கிறார் என்பதை தாண்டி பார்த்திபனுக்கு உதவி இயக்குனராக தனது மகள் பணியாற்றியிருக்கிறார் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது என்று தெரிவித்திருந்தார்.

#image_title
நடிப்பு என்பதை தாண்டி ஒரு தொழில்நுட்பக் கலைஞராவது என்பது மிகவும் முக்கியமானது. அது பார்த்திபன் சாரின் பள்ளியில் கிடைக்கும்.. இந்த படத்தின் டிரைலர் மிகவும் பிடித்திருக்கின்றது இப்படம் கட்டாயம் திரையரங்குகளில் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று அவர் பேசியிருந்தார்.