LATEST NEWS
சினிமா மட்டுமல்ல பிசினஸிலும் கல்லா கட்டும் நயன்தாரா…. அடுத்த பிசினஸின் தொடக்கம்… வைரல் புகைப்படம்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது புது பிசினஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாக அதைத் தொடர்ந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

#image_title
பொதுவாக ஹீரோயின்கள் தங்களது மார்க்கெட் காலியானதும் சின்னத்திரை நடிகைகளாக மாறிவிடுவார்கள். இல்லையென்றால் பிசினஸ் தொடங்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு சில நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். அப்படி ஒரு முடிவில் தான் நடிகை நயன்தாரா இறங்கி இருக்கின்றார்.

#image_title
தற்போது அவர் அழகு சாதன பொருட்கள் மற்றும் நாப்கின் பிசினஸை தொடங்கிய நிலையில் தற்போது புதிதாக ஒரு ட்ரீம் ஆபீஸ் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதோட பல புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருந்தார். அடுத்ததாக இவர் என்ன பிசினஸ் தொடங்க போகிறார் என பலரும் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.