CINEMA
69 வயது நடிகரோடு நடிக்க 18 கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா… ஆடிப்போன இயக்குனர்..!!!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது எல்லாம் சுமூகமாக முடிவடைந்து தற்போது தங்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக டெஸ்ட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெறவில்லை. இவர் கைவசம் தற்போது தற்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, MMMN, மூக்குத்தி அம்மன் 2, Hi என பல படங்கள் உள்ளன.
இதற்கிடையில் சிரஞ்சீவி நடிப்பில் அனில் ரவிபுடி இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்து, நயன்தாராவிடம் இப்படம் குறித்து பேசியுள்ளனர். ஆனால், இப்படத்தில் நடிக்க ரூ. 18 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.