CINEMA
G.O.A.T படத்தில் சினேகா…. நயன்தாரா சொன்ன அந்த விஷயம்…. உண்மையை ஓபனாக பேசிய VP…!!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பலமொழிகளிலும் வெளியான திரைப்படம் கோட் . இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை திரிஷா நடனம் ஆடியுள்ளார். படம் 6 நாட்களில் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. வசூல் ரீதியில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் கோட் பட நிகழ்ச்சி ஒன்றில், வெங்கட் பிரபு சினேகாவின் கதாபாத்திரம் குறித்து பேசிய பொழுது சினேகாவின் கதாபாத்திரம் முதலில் நயன்தாராவிடம் தான் சொல்லப்பட்டது. இது சரியாக அமையவில்லை. ஆனால் படம் பார்த்த பிறகு நயன்தாரா எனக்கு போன் செய்து இந்த கதாபாத்திரத்துக்கு சினேகா தான் மிகவும் பொருத்தமாக இருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக சினேகா நடித்துள்ளார் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.