அட இவ்ளோ நல்லவங்களா..? டூரிஸ்ட் பேமிலி நடிகருக்கு நயன்தாரா செய்த நல்ல விஷயம்… பாராட்டும் இணையவாசிகள்..! - cinefeeds
Connect with us

CINEMA

அட இவ்ளோ நல்லவங்களா..? டூரிஸ்ட் பேமிலி நடிகருக்கு நயன்தாரா செய்த நல்ல விஷயம்… பாராட்டும் இணையவாசிகள்..!

Published

on

சமீபத்தில் வெளியாகி  மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் படம் தான் டூரிஸ்ட் பேமிலி. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இயக்க சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். குழந்தை நட்சத்திரமாக நடிகர் கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர்களிடையே  தனி வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் முன்பாக ராட்சசி, காத்து வாக்குல ரெண்டு காதல், பிஸ்கோத் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று கலந்து கொண்ட இவர், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் நடந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் நேரத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் கமலேசை அழைத்து பேசியிருக்கிறார்கள். அப்போது அவருடைய ஸ்கூல் fees தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார். நயன்தாரா மேடம் தான் எனக்கு பீஸ் கட்றாங்க படத்தில் இறுதி நாளில் என்னை அழைத்து  பேசினார்கள் என்று தெரிவித்துள்ளார் கமலேஷ்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in