CINEMA
சசிகுமாரோடு நடித்ததற்கு இதுதான் காரணம்… நடிகர் சிம்ரன் ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் சிம்ரன். இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோது திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார். பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து விக்கிரமிற்கு ஜோடியாக மகான் என்ற படத்தில் நடித்தார். தற்போது பிரசாந்துடன் இணைந்து அந்தகன் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சிம்ரன் சினிமாவில் ஜூனியர் சீனியர் என்ற பேதம் கூடாது. திறமைக்கு முதலிடம். நல்ல குடும்ப கதையாக இருந்ததால் டூரிஸ்ட் பேமிலி படத்துக்கு ஓகே சொன்னேன். சசிகுமாருடன் இணைந்து நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம் தான் என்று கூறியுள்ளார்.