LATEST NEWS
43 வயதாகியும்…. இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?…. ஓபன்னாக பேசிய நடிகை மும்தாஜ்…!!!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை மும்தாஜ். கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். பல திரைப்படங்களில் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கின்றார். தற்போது சினிமா துறையை விட்டு ஒதுங்கி இருக்கும் மும்தாஜ் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். டி ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ்.

#image_title
இந்த திரைப்படம் வெற்றி கொடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதனால் மலபார் போலீஸ், ஸ்டார், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக குஷி திரைப்படத்தில் இவர் விஜயுடன் சேர்ந்து கட்டிபிடி கட்டிப்புடிடா என்ற பாடல் எனக்கு நடனமாடி இருப்பதை யாராலும் மறந்திருக்க முடியாது.

#image_title
மீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். தற்போது புர்காவில் வலம் வரும் இவர் இனி அல்லா தான் எல்லாம் என்று முழு நேரமும் ஆன்மீகத்தில் இறங்கி இருக்கின்றார். இதற்கு முன்பு தான் செய்த விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். இந்நிலையில் 43 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்து மும்தாஜ் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

#image_title
அதில் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கின்றேன். தற்போது இறைவனை நாட துவங்கி விட்டேன் . உண்மையில் எனக்கு 25 வயது இருக்கும் போது ஆட்டோ இம்யூனிட்டி டிஸ்ஆர்டர் என்ற நோய் ஏற்பட்டது. இதனால் எனக்கு திருமண வாழ்க்கை செட்டாகாது என்று முடிவு செய்தேன். மற்றவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் போது எனக்கும் வருத்தம் இருக்கும். எனக்கு இனி திருமணம் நடக்குமா? என்பதை அல்லாஹ் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.