LATEST NEWS
“பஞ்சதந்திரம் 2″…. “கமல் கேரக்டரில் இந்த நடிகர் பண்ணா டாப்பா இருக்கும்”…. ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்…!!!
ரேடியோவில் ஆர்ஜே வாக தனது கேரியரை தொடங்கியவர் ஆர்ஜே பாலாஜி. மிகவும் வேகமாக பேசுவதின் மூலமாக அனைவரின் கவனத்தை கவர்ந்த இவர் பின்னர் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ஆர் ஜே பாலாஜி திடீரென்று ஹீரோவா அவதாரம் எடுத்தார்.
முதன் முதலாக எல்கேஜி என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோவாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்டுல விசேஷம், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் ஹீரோவா நடித்து வெற்றி கண்டார். தற்போது வரை இயக்குனர், நடிகர் மேலும் கிரிக்கெட் கமாண்டராகவும் பணி செய்து வருகிறார், பன்முகத் திறமை கொண்ட பாலாஜி தனியார் சேனலில் அஜித் குறித்து பேசியிருந்தார்,
அஜித்திற்கு பஞ்சதந்திரம் படத்தில் கமல் கேரக்டரில் அஜித்தை நடிக்க வைத்திருந்தால் பிரமாதமாக இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் பஞ்சதந்திரம் 2 படத்தை எடுத்தால் கமல் கேரக்டரில் அஜித் தான் நடிக்க வேண்டும் என்றும் அது மட்டும் இல்லாமல் சிம்ரன் கேரக்டரில் நயன்தாரா நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவருடைய ஸ்டைல், தோற்றம் அனைத்தும் பஞ்சதந்திரம் 2 படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என கூறியிருந்தார்.