LATEST NEWS
லியோவுக்கு ‘ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’… விடாமுயற்சிக்கு இந்த ஹாலிவுட் படமா?…. ஒரே ஒரு சீன்…. முழு கதையும் லீக்…!!!

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் நடிகர் அஜித், இவர் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

#image_title
இந்த படத்தின் காட்சிகள் அஜர்பைஜானில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் மீதம் இருக்கும் காட்சிகள் ஏப்ரல் பத்தாம் தேதி முதல் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இதற்கு இடையில் விடாமுயற்சி அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள்.

#image_title
அதில் நடிகர் அஜித் எந்தவித டூப்பும் இல்லாமல் கார் ஸ்டண்ட் செய்யும் வீடியோ வெளியானது. இதை பார்த்து ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்த ஒரு சீனை பார்த்து ரசிகர்கள் இந்த படம் பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி என்று கூறி வருகிறார்கள்.

#image_title
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டு வரும் நிலையில் விடாமுயற்சி திரைப்படமும் ரீமேக்காக இருக்குமோ? என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.