LATEST NEWS
நடிகர் முரளியின் மகளைப் பார்த்துள்ளீர்களா?…. அவர் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?…!!!

தமிழ் சினிமாவில் 80-களில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் முரளி. இவர் முதலில் கே பாலச்சந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஒரு இயக்குனராக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை. ஆனால் இவர் பூவிலங்கு என திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார் .

#image_title
அதுமட்டுமில்லாமல் இவர் கன்னட திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்தலிங்கையாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் பகல் நிலவு, வண்ண கனவுகள், புதுவசந்தம், இதயம், ஒரு தலை ராகம், காலமெல்லாம் காதல் வாழ்க, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அந்த காலகட்டத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் முரளி.

#image_title
இவர் தனது 48 வயதில் இருதய நோய் காரணமாக உயிரிழந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள். அதர்வா, ஆகாஷ் மற்றும் காவியா. அதர்வா சினிமாவில் நடித்து வருகிறார். மூன்றாவது மகன் ஆகாஷ் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

#image_title
இந்நிலையில் முரளியின் மகன்கள் பற்றி தெரிந்த அளவிற்கு அவரது மகள் காவியா பற்றி தெரியாது. முரளியின் மூத்த மகளான காவியம் டாக்டராக பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது .அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.