பெத்த மகள் ஆசையாக கேட்ட கார்…. “சர்ப்ரைஸாக வாங்கி கொடுத்த கொட்டாங்குச்சி”…. விலை எவ்வளவு தெரியுமா?…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பெத்த மகள் ஆசையாக கேட்ட கார்…. “சர்ப்ரைஸாக வாங்கி கொடுத்த கொட்டாங்குச்சி”…. விலை எவ்வளவு தெரியுமா?…!!!

Published

on

காமெடி நடிகரான கொட்டாங்குச்சி தனது மகளுக்கு 13 லட்சம் ரூபாயில் புது கார் ஒன்றை வாங்கி பரிசாக வழங்கியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கொட்டாகுச்சி. இயற்கையாகவே இவருக்கு காமெடி வந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் திரைத்துறையில் இருந்து வெளியேறினார்.

#image_title

இருப்பினும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்து வந்தார். இவர் தன்னுடைய மகளை நடிகையாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்த நிலையில்,நடிகை  நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் மானஸ்வி  நயன்தாராவின் மகளாக நடித்து அசத்தியிருந்தார். முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

#image_title

அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் மானஸ்வியின்  பிறந்த நாள் என்பதால் அவருடைய தந்தை கொட்டாங்குச்சி மகள் ஆசைப்பட்டது போல் ஒரு காரை பரிசாக வழங்கியிருக்கிறார். இந்த காரின் விலை மொத்தம் 13 லட்சம் ஆகும். இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

#image_title

Continue Reading
Advertisement