கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் இயக்குனரிடம் கொள்ளை…. பரபரப்பு புகார்…! இதுவே வேலையா போச்சு..!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் இயக்குனரிடம் கொள்ளை…. பரபரப்பு புகார்…! இதுவே வேலையா போச்சு..!!!

Published

on

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இவர் தன்னிடம் பண மோசடி செய்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல சினிமா பிரபலங்கள் அடிக்கடி மேனேஜர்களை மாற்றுவதற்கு காரணம் பணம் மோசடியில் ஈடுபடுவது தான்.அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

#image_title

கடந்த 2020 ஆம் ஆண்டு துல்கர் சல்மான், ரிது வர்மா, விஜே  ராக்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். அந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் உடனடியாக தனக்கு ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்யுமாறு கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் ஸ்கிரிப்ட் ரெடி செய்து ரஜினிகாந்திடம் கொடுத்தபோது அந்தப் படத்தை தவிர்த்து விட்டார் ரஜினிகாந்த்.

#image_title

இதனால் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்புவை வைத்து எஸ்டிஆர் 48 படமாக உருவான போவதாக தேசிங்கு பெரியசாமி கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தன்னிடம் மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசுக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். தன்னுடைய உதவி இயக்குனரான முகமது இக்பால் பணத்தை கொள்ளை அடித்து விட்டதாக அவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Advertisement