LATEST NEWS
கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போச்சு…! கோர்ட்டு படி ஏறிய தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி…. என்ன இப்படி பண்ணிட்டீங்க?..!!

நடிகர் தனுஷ் மட்டும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ஹிட்டு கொடுத்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல நடிகரான ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஆவார்.

#image_title
இவர்கள் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சினிமாவில் மிகவும் மகிழ்ச்சியான ஜோடியாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென்று தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தார்கள். இது ஒட்டுமொத்த திரையரங்கத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

#image_title
இதைத்தொடர்ந்து தனுஷ் தனியாக வசித்து வந்து நிலையில் அவரது மகன்கள் தாயுடன் தந்தையுடனும் மாறி மாறி இருந்து வந்தார்கள். பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் தோல்வியில் முடிந்ததால் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தரப்பினர் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். விரைவில் இது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.