LATEST NEWS
24 ஆண்டு கால திருமண வாழ்க்கை…. காதல் கணவரை விவாகரத்து செய்த கமல் பட நடிகை….!!!
மலையாள சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை மஞ்சு பிள்ளை. இவர் சிநேகிதியே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த மன்மதன் அம்பு படத்தில் தயாரிப்பாளர் மஞ்சு குரூப் என்பவரின் மனைவியாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தை பலரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
சிறந்த நடிகராக இருக்கும் மஞ்சு பிள்ளை, 2000 ஆண்டு ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தயா என்கின்ற மகன் இருக்கிறார்கள். சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக மலையாள திரையுலகில் பேச்சு எழுந்தது. அது குறித்து இருவரும் பதில் அளிக்காமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுஜித் வாசுதேவ் தங்களது விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்துக்கான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது என்று கூறியிருந்தார். மேலும் நடிகை மஞ்சு பிள்ளை மிகச் சிறந்த நடிகை என்று அவர் கூறியிருந்தார். இவரின் 24 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிந்தது குறித்து மலையாள சினிமா ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.