LATEST NEWS
எப்போமே நான் தா நம்பர் 1…! அன்னபூரணியை பாத்துமா இப்படி?…. அடுத்த படத்துல அம்முனி சம்பளம் தெரியுமா?…!!!
நடிகை நயன்தாரா அடுத்தடுத்து திரைப்படங்களில் தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

#image_title
தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை நயன்தாரா. ஒரு படத்திற்கு 5 கோடி முதல் ஏழு கோடி வரை சம்பளமாக பெற்று வந்தார். தென்னிந்திய சினிமாவை தொடர்ந்து ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்த நிலையில் தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி இருக்கின்றார்.

#image_title
இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இருப்பினும் தன்னுடைய சம்பளத்தை குறைக்காமல் 12 கோடியாக உயர்த்தி இருக்கின்றார். குறும்படத்தை இயக்கி வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமாகும் செந்தில் இயக்கத்தில் நயன்தாரா புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அப்படத்திற்கு அவர் 12 கோடி சம்பளம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
