எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்.. திட்டவட்டமாக கூறிய நடிகை நயன்தாரா.. என்ன காரணமா இருக்கும்..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்.. திட்டவட்டமாக கூறிய நடிகை நயன்தாரா.. என்ன காரணமா இருக்கும்..?

Published

on

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயந்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் சென்னையில் இருக்கும் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் பல்வேறு படங்களில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இல்லாமல் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் நாப்கின்ஸ் என பிசினஸிலும் இறங்கி விட்டார் நயன்தாரா.

Advertisement

நடிப்பு, பிசினஸ் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தனது குடும்பத்தை கவனிக்கவும் நயன்தாரா தவறியதில்லை. இன்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் நயன்தாராவும் ஒருவர். இந்நிலையில் சரவணனின் லெஜண்ட் படத்தில் நடிப்பதற்கு முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நயன்தாராவின் சம்பளத்தை இரட்டிப்பாக தருவதாகவும் ஒப்பந்தம் பேசப்பட்டதாம். ஆனால் 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என நயன்தாரா திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

Advertisement

#image_title

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in