“விஜய் வேற; நான் வேற” அவரிடம் நான் தான் முதல்ல சொன்னேன்.. விஜயின் அரசியல் வருகைக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய் வேற; நான் வேற” அவரிடம் நான் தான் முதல்ல சொன்னேன்.. விஜயின் அரசியல் வருகைக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்..!!

Published

on

சினிமாவின் உச்சத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அந்த கட்சி வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து தன் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன். அதன் பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு முன்பு மக்கள் நீதி மையத்தில் ஏழாம் ஆண்டு விழா நடைபெற்றது.

Advertisement

இந்த விழாவில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு அரசியல் பற்றி பல்வேறு விஷயங்களை பேசினார். அப்போது விஜயின் அரசியல் வருகை குறித்தும், சினிமாவில் இருந்து அவர் விலகுவது குறித்தும் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் அது அவரது இஷ்டம்.

#image_title

அவர் செய்யும் சினிமா அவர் பாணி, நான் செய்யும் சினிமா எனது பாணி.. நான் ஏற்கனவே விஜயோடு பேசியிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என அவரை வரவேற்ற முதல் குரல் என்னுடையதுதான் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in