LATEST NEWS
இதென்னடா பொன்னியின் செல்வன்-3 மாதிரி இருக்கு.. ஜெயம் ரவி, துல்கர் சல்மானை அடுத்து பிரபல படத்தில் இணைந்த திரிஷா.. வெளியான தகவல்..!!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம் 1987-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. சுமார் 35 வருடத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இதனை கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இதனை அடுத்து தக் லைப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவிலும் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே தக் லைப் படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை திரிஷா தக் லைப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளின் சீன் பேப்பர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏராளமான பிரபலங்கள் நடிக்க இருப்பதால் படம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.