LATEST NEWS
அஜித் படத்தில் நடிக்க கமிட் ஆனது குத்தமா..? செம கடுப்பில் இருக்கும் த்ரிஷா.. வாய்ப்புகள் பறிபோகுமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகர் த்ரிஷா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு பிரேக் விட்டிருந்த திரிஷாவுக்கு மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இதனையடுத்து விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்தார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்ததால் தமிழிலும், மலையாளத்திலும் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஏற்கனவே அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க திரிஷா கமிட் ஆனார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. ஆனால் அங்கு பனிப்புயல், மழை, மணல் புயல் காரணமாக படபிடிப்பு அடிக்கடி நிறுத்தப்பட்டது. திரைப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போகிறது.
இதனால் மற்ற படங்களுக்கு கொடுத்த கால் ஷீட்டில் குளறுபடி ஏற்படுகிறது. அந்த பட குழுவினர் தங்களுக்கு கொடுத்த தேதியில் வரவேண்டும் என த்ரிஷாவை கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திரிஷா கோபத்தில் புலம்பி வருவதாக தகவல்கள் உலா வருகிறது.