LATEST NEWS
GOAT படத்தில் விஜய்க்கு தங்கச்சியாகும் சினிமா பிரபலத்தின் மகள்.. யார் தெரியுமா..? முதல் படத்திலேயே அரிய வாய்ப்பு..!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே GOAT படத்தில் விஜயின் தங்கையாக போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
பல கட்ட யோசனைப் பிறகு தற்போது விஜயின் தங்கையாக பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இதுவரை இவர் திரையுலகில் எந்த படத்தில் நடிக்கவில்லை.
அபியுக்தா முதல் படத்திலேயே விஜயின் தங்கையாக நடிக்க உள்ளார். இதனால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது குறிப்பிடதக்கதாகும்.