அடேங்கப்பா.. ஒரு படத்துக்கே இத்தனை கோடியா.. தலையை சுற்ற வைக்கும் பத்து தல சிம்புவின் சொத்து மதிப்பு .. - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா.. ஒரு படத்துக்கே இத்தனை கோடியா.. தலையை சுற்ற வைக்கும் பத்து தல சிம்புவின் சொத்து மதிப்பு ..

Published

on

இயக்குனர் T. ராஜேந்திரன் மகன் என்ற அடையாளத்தோடு சிறு  வயதில் இருந்து சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர்  சிம்பு. இன்று  இவரின் 41வது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதை தொடர்ந்து சிம்புவின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியானது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இவரின்  48வது படத்தின் தயாரிப்பும் நடந்து கொண்டு இருக்கிறது.

Advertisement

எஸ்.டி.ஆர் 48 படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில்  இன்று சிம்புவின் பிறந்தநாள் என்பதினால் அதை கொண்டாடும் விதமாக படக்குழு  அப்படத்தின் First look போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

1 வயதில் இருந்து நடிக்க துவங்கிய சிம்பு, நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடகர் போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார். மேலும் தன்னுடைய 50 வது படத்தை அவரே இயக்கி  நடிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில், 41வது பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் சிம்புவின் முழு சொத்து மதிப்பு  150 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் ஒரு படத்திற்கு ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement