LATEST NEWS
குடும்பத்தையும், தொழிலையும் ஒன்றாக சேர்த்தால் இப்படித்தான்.. ஜெயம் ரவியை சிக்கலில் மாட்டி விட்ட மாமியார்.. அந்த நிறுவனத்திடம் இது சரி வருமா..?

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படம் சைரன். இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வருகிற பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி சைரன் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் சைரன் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இப்போது தேர்தல் நெருங்குவதால் உதயநிதி ஸ்டாலின் முன்னெச்சரிக்கையாக படங்கள் குறித்த விஷயங்களில் தலையிடுவதில்லை. இதனால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி தான் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார். பொதுவாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் காசு கொடுத்து படத்தை வாங்குவதில்லை.
மாறாக படத்தை திரையிட்டு வரும் லாபத்தில் கமிஷன் தொகை எடுத்துக் கொண்டு மீது உள்ள பணத்தை பல தயாரிப்பாளரிடம் கொடுத்து விடுவார்கள். ஆனால் சைரன் படத்தின் தயாரிப்பாளரும், ஜெயம் ரவியின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார் சைரன் படத்திற்கு அட்வான்சாக 15 கோடி ரூபாய் பணத்தை தருமாறு செண்பக மூர்த்தியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு செண்பகமூர்த்தி 10 கோடி ரூபாய் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டு ஒரு செக் வைத்துள்ளாராம். அதாவது ஜெயம் ரவி அடுத்ததாக காதலிக்க நேரமில்லை படத்தில் நடிக்க 18 கோடி ரூபாய் சம்பளம் பேசி 7 கோடி ரூபாய் பணத்தை அட்வான்ஸ் ஆக வாங்கியுள்ளார். அந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.
ஒருவேளை சைரன் படம் எதிர்பார்த்த அளவு திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றால் காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஜெயம் ரவிக்கு பேசப்பட்டுள்ள சம்பளத்தில் இருந்து நஸ்டமான தொகை கழிக்கப்படும் என செண்பகமூர்த்தி கூறியுள்ளாராம். இதனை கேட்டு சுஜாதா விஜயகுமார் அதிர்ச்சியில் உள்ளாராம். அடுத்து என்ன செய்யலாம் என இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.