தனி ஒருவன் 2 படத்திற்கு வந்த சிக்கல்.. ஜெயம் ரவியால் அப்செட் ஆன மோகன் ராஜா.. அதற்கு காரணம் இயக்குனர் மணிரத்தினமா..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

தனி ஒருவன் 2 படத்திற்கு வந்த சிக்கல்.. ஜெயம் ரவியால் அப்செட் ஆன மோகன் ராஜா.. அதற்கு காரணம் இயக்குனர் மணிரத்தினமா..?

Published

on

ஜெயம் ரவியின் தனி ஒருவன் திரைப்படம் கடந்த 2015-ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி மிரட்டி இருந்தார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில் தனி ஒருவன் 2 படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. அந்தப் படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்டது. இரண்டாம் பாகத்தில் வில்லனாக யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

Advertisement

வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக்லைப் படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனால் அந்த படத்தை முடித்துவிட்டு தனி ஒருவன் 2-வில் நடிக்க வருவேன் என ஜெயம் ரவி தனது அண்ணன் மோகன் ராஜாவிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் தனி ஒருவன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement