LATEST NEWS
ஓடாத படத்திற்கே இப்படியா..? நடிகர் ஜெயம் ரவிக்கு மாமியார் கொடுத்த காஸ்ட்லியான கிப்ட் என்ன தெரியுமா..? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. சமீப காலமாக ஜெயம் ரவியின் படங்கள் எதிர்பார்த்து அளவு வெற்றியை பெறவில்லை. தற்போது கமலின் தக் லைப் படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை தரவில்லை.
அந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் தான் தயாரித்துள்ளார். ஜெயம் ரவியின் பெரும்பாலான படங்களை அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் தயாரிக்கிறார். இந்த நிலையில் சுஜாதா விஜயக்குமார் தனது மருமகன் ஜெயம் ரவிக்கு 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கை கடிகாரத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
ஓடாத படத்துக்கு எப்படி என்றால் படம் ஓடினால் என்ன கொடுத்திருப்பார் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். ஏற்கனவே முகேஷ் அம்பானி வீட்டிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஆனந்த் அம்பானியின் கையில் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வாட்ச்சை கட்டி இருப்பார்.
அதனை பார்த்த facebook நிறுவனரும் அவரது மனைவியும் ஆச்சரியத்தில் அது பற்றி விசாரித்தனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. எல்லா வாட்ச்சிலும் ஒரே நேரம்தான் காட்டும். அப்படி இருக்க இவ்வளவு கோடியில் விலை கொடுத்து வாங்குகிறார்களே என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.