GALLERY
சின்ன குழந்தையாகவே மாறிட்டாரே.. மகன்களுடன் குறும்புத்தனம் பண்ணும் ஜெயம் ரவி.. ட்ரெண்டிங் போட்டோஸ் இதோ..!!
நடிகர் ஜெயம் ரவி தனது சகோதரனின் இயக்கத்தில், தந்தை தயாரிப்பில் வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இதனையடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், எங்கேயும் காதல், தனி ஒருவர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி அருள் மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. ஆனால் ஜெயம் ரவியின் அகிலன், இறைவன் உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இந்த ஆண்டு ஜெயம் ரவியின் மூன்று படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் நடித்திருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் நடித்த சைரன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் தேதி தள்ளி போனது. வருகிற பிப்ரவரி மாதம் சைரன் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து பிரியங்கா மோகனுடன் இணைந்து நடிக்கும் பிரதர் திரைப்படம், மூன்று இளம் கதாநாயகிகளுடன் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ஜீனி, மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக உள்ள தனி ஒருவன் 2 என அடுத்தடுத்த படங்களில் ஜெயம் ரவி கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் ஜெயம் ரவி தனது மனைவியை மற்றும் மகன்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சின்ன குழந்தை போல ஜெயம் ரவி தனது மகனுடன் குறும்புத்தனமாக விளையாடுவதை பார்த்து லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.