GALLERY
உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லெஜண்ட் சரவணன்.. அடுத்த படத்தின் அப்டேட் உங்களுக்காக.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

லெஜண்ட் சரவணன் தமிழ் சினிமாவில் தி லெஜண்ட் படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். முதல் படமே ஏராளமான விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியானது.
அந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார். அந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார்.
மேலும் விவேக், ரோபோ சங்கர், தேவதர்ஷினி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் அந்த படத்தில் நடித்திருந்தனர். அந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
முன்னதாக லெஜண்ட் சரவணன் ஹன்சிகா, தமன்னா என முன்னணி நடிகைகளுடன் இணைந்து தனது கடை விளம்பரங்களில் நடித்திருந்தார்.
அவ்வப்போது லெஜண்ட் சரவணன் போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார்.
லெஜெண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படம் ஓடிடியிலும் வெளியாகி அதிக வியூஸ்க்களை பெற்றது. இந்நிலையில் துரை செந்தில்குமார் அடுத்ததாக லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துரை செந்தில்குமார் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், தனுஷின் கொடி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது கருடன் என்ற படத்தை துரை செந்தில்குமார் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்தில் லெஜண்ட் சரவணன் பங்கேற்றார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும் அப்டேட் கூறியுள்ளார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.