என்னப்பா சொல்றீங்க.. நடிகை ஜோதிகாவுக்கு நக்மாவை தவிர்த்து உடன் பிறந்த சகோதரி இருக்காங்களா..? அவங்களும் ஒரு நடிகையாம்.. பலரும் பார்க்காத புகைப்படங்கள் இதோ..!! - cinefeeds
Connect with us

GALLERY

என்னப்பா சொல்றீங்க.. நடிகை ஜோதிகாவுக்கு நக்மாவை தவிர்த்து உடன் பிறந்த சகோதரி இருக்காங்களா..? அவங்களும் ஒரு நடிகையாம்.. பலரும் பார்க்காத புகைப்படங்கள் இதோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2006-ஆம் ஆண்டு ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ஜோதிகாவுக்கு நக்மா என்ற சகோதரி இருப்பது பலருக்கு தெரியும். ஆனால் நக்மா ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி இல்லை.

அவர் ஜோதிகாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஆவார். நக்மாவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலானோருக்கு ஜோதிகாவுக்கு உடன் பிறந்த சகோதரி இருப்பது தெரியாது.

Advertisement

ஆம் அவர்தான் ராதிகா சாதனா. அவர் திரைத்துறையில் ரோஷினி என அழைக்கப்படுகிறார். ரோஷினி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை ரோஷினி ஆறு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

தமிழில் துள்ளித் திரிந்த காலம், சிஷயா ஆகிய படங்களில் ரோஷினி நடித்துள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டு சிரஞ்சீவிக்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ரோஷினி நடித்தார்.

Advertisement

ரோஷினி நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடைசியாக நெப்போலியன் ஜோடியாக புலி பிறந்த மண் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் வெளிவரவில்லை.

இதனால் திரைத்துறையில் இருந்து ரோஷினி விலகினார். இந்நிலையில் ஜோதிகா தனது தங்கை ரோஷினியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Advertisement

அதனை பார்த்த ரசிகர்கள் ரோஷினி பார்ப்பதற்கு ஜோதிகா போலவே இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in