“பெரிதாக கனவு காணுங்கள்”.. சிவகார்த்திகேயனின் வெறித்தனமான ஒர்க் அவுட்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

GALLERY

“பெரிதாக கனவு காணுங்கள்”.. சிவகார்த்திகேயனின் வெறித்தனமான ஒர்க் அவுட்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான மெரினா படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார்.

இதனையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், டாக்டர், டான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

Advertisement

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

விஜய் டிவியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வித்தியாசமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருக்கிறார்.

Advertisement

இந்த நிலையில் உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

அந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். அந்த படத்திற்கு தற்காலிகமாக எஸ் கே 21 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

சிவகார்த்திகேயன் ராணுவ வீரரை போல் உடல் கட்டமைப்பை பெறுவதற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி படக்குழுவினர் சிவகார்த்திகேயனின் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

மேலும் படத்தின் டைட்டில், டீசர் வருகிற 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் அதிரடியாக களம் இறங்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

Advertisement

சிவகார்த்திகேயன் வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement