GALLERY
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய 80-S பிரபல நடிகர் மோகன்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது உடல் அரசு மரியாதை உடன் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்தின் இறப்பிற்கு திரை பிரபலங்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கோயம்பேட்டில் இருக்கும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்ற நடிகர் மோகன் விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நடிகர் மோகன் 80-களில் தமிழ் சினிமாவில் நுழைந்து தனது அருமையான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் கொண்டு வந்தவர்.
இவரது பல திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு மேல் மோகனை சினிமாவில் பார்க்க முடியவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரா என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மேலும் தளபதி விஜயின் கோட் திரைப்படத்திலும் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய மோகன் அவரது ரசிகர் மன்றம் சார்பாக ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுத்துள்ளார்.
அப்போது தேமுதிக நிர்வாகிகள், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.