கணவர் மீது அதீத அன்பு.. விஜயகாந்தின் முகத்தை தத்ரூபமாக பச்சை குத்தி கொண்ட பிரேமலதா.. வைரலாகும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கணவர் மீது அதீத அன்பு.. விஜயகாந்தின் முகத்தை தத்ரூபமாக பச்சை குத்தி கொண்ட பிரேமலதா.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். பெரும் மக்கள் கூட்டம் முன்னிலையில் அரசு மரியாதையுடன் கேப்டனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அவரது மறைவு தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரையும் பாதித்தது. ஏராளமானோர் விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். சினிமாவில் இருந்த போதே தன்னுடன் இருப்பவர்களும் பொதுமக்களும் முன்னேற வேண்டும் என நினைத்தவர் விஜயகாந்த்.

Advertisement

தேமுதிக தலைவர் ஆன விஜயகாந்த் மறைவதற்கு முன்னரே பிரேமலதா கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர்களது மகன் செந்தூர பாண்டியன் நடிப்பிலும், விஜய பிரபாகரன் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இன்றும் ஏராளமான பொதுமக்கள் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தற்போது பிரேமலதா தனது வலது கையில் விஜயகாந்தின் உருவத்தை பச்சை குத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தனது கணவர் மீது உள்ள அன்பால் பிரேமலதா அவரது உருவத்தை பச்சை குத்தி கொண்டதால் ரசிகர்களும், தொண்டர்களும் சந்தோஷத்தில் உள்ளனர். பிரேமலதா தனது கையில் விஜயகாந்தின் உருவத்தை பச்சை குத்தி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Irezumi tattoos india (@irezumitattoosindia)

Advertisement

Advertisement