Puppy-க்கு பிறந்தநாள் வாழ்த்து.. குழந்தை போல நாய்க்குட்டியுடன் விளையாடும் சூர்யா.. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ இதோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

Puppy-க்கு பிறந்தநாள் வாழ்த்து.. குழந்தை போல நாய்க்குட்டியுடன் விளையாடும் சூர்யா.. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ இதோ..!!

Published

on

பிரபல நடிகரான சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக உள்ள அந்த படத்திற்கு புறநானூறு என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். சூர்யாவும் முன்னணி நடிகையான ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் மலையாளத்தில் வெளியான காதல் திகோர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் சூர்யாவும் ஜோதிகாவும் குழந்தைகளுடன் தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் சூர்யா தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனமாக இருப்பார். சூர்யா தனது மனைவி ஜோதிகா மகள் மற்றும் மகனுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

மேலும் தியா பள்ளி விழாவில் பதக்கம் வாங்கியபோது சூர்யாவும் ஜோதிகாவும் உடன் இருந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஜோதிகா தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய் குட்டி விளையாடும் வீடியோவை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement