கங்குவா படத்தை பார்த்தவுடன் சூர்யா கொடுத்த ரியாக்ஷன்.. அந்த விஷயத்தில் மட்டும் குறை.. அப்போ ரிலீஸ் இன்னும் தள்ளி போகுமா..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

கங்குவா படத்தை பார்த்தவுடன் சூர்யா கொடுத்த ரியாக்ஷன்.. அந்த விஷயத்தில் மட்டும் குறை.. அப்போ ரிலீஸ் இன்னும் தள்ளி போகுமா..?

Published

on

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் கங்குவா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திரிஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கங்குவா படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் பத்து மொழிகளில் கங்குவா படம் ரிலீஸ் ஆக உள்ளதாக பட குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அடுத்ததாக கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்த மாத இறுதியில் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சூர்யா கங்குவா படத்தை பார்த்துள்ளார்.

அதனை பார்த்தவுடன் சூர்யா சிறுத்தை சிவாவிடம் படம் சூப்பராக இருக்கிறது என பாராட்டியுள்ளார். ஆனால் படத்தில் VFX காட்சிகள் ஒரு குறையாக இருப்பதை சூர்யா சுட்டிக் காட்டியுள்ளார். அதனை சரி செய்யுமாறு சூர்யா அறிவுறுத்தியதால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

Advertisement

Continue Reading
Advertisement